தேர்தல் ஜுரத்தின் உச்சம்; கோல்கத்தா தவிப்பு

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரங்கள் ஆங்காங்கே நடைபெறுகையில் பாஜக ஆதரவாளர்களுக்கும் திரிணாமூல் காங்கிரசினருக்கும் இடையே தகராறுகள், வாக்குவாதங்கள், கைக்கலப்புகள் எனத் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமையில் குறைந்தது 26 பேர் கைது செய்யப்பட்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்தியப் பொதுத்தேர்தலின் ஏழாவது கட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சண்டிகார், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக 10,000க்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகளும் துணை போலிஸ் படையினரும் பணியில் அமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.