கைது செய்வதற்கான தடை நீக்கம்

புதுடெல்லி: மேற்கு வங்க சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தி ருந்தது. அதில், சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க ராஜீவ் குமார் முயல்வதால் அவரைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன் றம், ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கியது. மேலும் கைது தொடர்பாக 7 நாட்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அதற்குள் உரிய நீதிமன்றத்தை அணுகி ராஜீவ் குமார் முன்பிணை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon