புதிய அரசு தவிக்கும் என கணிப்பு

புதிய அரசு தவிக்கும் என கணிப்பு

2 mins read

புதுடெல்லி: இரண்டாவது முறை பிரதமர் பதவியைக் கைப்பற்றும் வேட்கையில் இந்தியாவின் பாஜக தீவிரமாக இருக்கும் நிலையில் அந்நாட்டின் பொருளியல் வேகம் குறைந்து மந்தம் அடைந்து வரு வதாக பிபிசியின் இந்தியப் பிரிவு தெரிவித்து உள்ளது.

உலகின் வேகமான பொருளி யல் நாடுகளில் ஒன்று என்று பேசப்படும் இந்தியா, கடந்த டிசம் பர் மாதம் முடிவடைந்த காலாண்டில் 6.6% என்னும் குறைவான வளர்ச் சியைக் கண்டதாக அது தெரி வித்துள்ளது.

அதற்கு முந்திய ஆறு காலாண் டுகள் அல்லது சுமார் ஒன்றரை ஆண்டுகளில் காணாத சரிவு அது.

அதேபோல சிறிய, ஆடம்பர கார்களின் விற்பனை ஏழாண்டு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. டிராக்டர்கள், இருசக்கர வாகனங் களின் விற்பனையும் குறைந்துவிட் டது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப் படையில் வங்கி, நிதித் துறை களைச் சேர்ந்த 334 பெரு நிறு வனங்களின் நிகர லாபம் 18 விழுக்காடு வீழ்ந்துவிட்டதாக 'ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்' செய்தித்தாள் தெரிவித்துள்ளதை பிபிசி மேற்கோள் காட்டி உள்ளது.

"வீழ்ச்சி நிலவரம் இத்துடன் முடிந்துவிடவில்லை.

உலகின் வேகமான விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் அத்துறை கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

"இந்தியாவில் ஆக அதிகமாக விற்கப்படும் நுகர்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன் றான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் மார்ச் வரையிலான காலாண்டில் தனது வருவாய் வளர்ச்சி வெறும் 7 விழுக்காடுதான் என்று அறிவித்துள்ளது.

"இது கடந்த 18 மாதங்களில் காணாத சரிவு என்றும் அந்நிறு வனத்தின் அறிக்கை குறிப்பிட்டு உள்ளது," என்கிறது பிபிசி.

இந்த சரிவான நிலவரம் இதற்கு முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகவும் கடினமாகி வருவதாக உலக வங்கியின் முன்னாள் பொருளியல் தலை வரும் கார்னல் பல்கலைக் கழகத்தின் பொருளியல் பேராசிரி யருமான கௌசிக் பாசு பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் திடீரென்று அறிவித்த பணமதிப்பிழப்பு நட வடிக்கை விவசாயிகளை மிக மோசமாகப் பாதித்ததும் பொரு ளியல் சரிவுக்கு ஒரு காரணம் என்கிறார் திரு பாசு.