செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளைத் தவிர்த்த மோடி; பதிலளித்த அமித் ஷா

செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளைத் தவிர்த்த மோடி; பதிலளித்த அமித் ஷா

2 mins read

புதுடெல்லி: அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அழைத்திருந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், பெரும்பாலான கேள்வி களுக்கு அவர் பதில் அளிக்காமல் பாஜக கட்சித் தலைவர் அமித் ஷா பக்கம் கைகாட்டியது பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

பிரதமராகி ஐந்து ஆண்டுகள் நிறைவுறவுள்ள நிலையில், முதன் முறையாக நேற்று முன்தினம் மோடி செய்தியாளர்களைச் சந்தித் தார். பாஜக கட்சித் தலைவர் அமித் ஷாவும் உடனிருந்தார்.

அப்போது பேசிய மோடி "நாட் டின் நிர்வாக முறைகளில் நாங்கள் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இருக்கிறோம். மீண்டும் நாங்களே வெற்றி பெற்று நாட்டை ஆள்வோம்," என்றார்.

ஆனால் அதற்குப் பிறகு செய்தியாளர்கள் கேட்ட பெரும் பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. மேலும் மோடி பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமித் ஷா வும் கூறினார்.

குறிப்பாக பாஜகவின் பிரக்யா தாகூர் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் ஒழுங்கைப் பின்பற்றுபவன். எனக்குக் கட்சித் தலைவர்தான் எல்லாமும்," என்று கூறி தான் பதிலளிக்காமல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பக்கம் கைக்காட்டினார் மோடி.

மேலும் மேற்கு வங்க கலவரம், மம்தா பானர்ஜி, ரஃபேல் ஊழல் உள்ளிட்ட கேள்விகளுக்கும் அமித் ஷாதான் பதிலளித்தார்.

தனது டுவிட்டர் பதிவில் இதைக் கிண்டல் செய்துள்ள காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "மோடிக்கு எனது வாழ்த்துகள். செய்தியாளர் சந்திப்பு மிகவும் பிர மாதமாக இருந்தது. அடுத்த முறை செய்தியாளர் சந்திப்பின் போது பதில் அளிக்க அமித்ஷா அனுமதி அளித்தால் நல்லது," என்று கூறியிருந்தார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதுகுறித்துக் கூறுகையில், "பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கீ பாத்' என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்று வார். அந்த நிகழ்ச்சியின் கடைசி வாரத்தை தொலைக்காட்சி நிகழ்த்தியது போல் இருந் தது. இது பாஜகவின் பிரியா விடைக்கான சந்திப்பு. செய்தி யாளர்கள் கேள்வி கேட்க முடியா மல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது," என்றார்.