கமல்ஹாசன்: இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்

கமல்ஹாசன்: இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்

1 mins read

சென்னை: ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது; இன்னொரு செருப்புக்காகக் காத்திருக்கிறேன் என்று சென்னையில் நடந்த 'ஒத்த செருப்பு' என்னும் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் பேசினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என்று அரவக் குறிச்சி தேர்தல் பிரசாரத்தின் போது கமல் குறிப்பிட்டார்.

பிறகு அவர் திருப்பரங்குன் றத்தில் பேசியபோது பிரசாரக் கூட்டத்தில், மேடையை நோக்கி ஒற்றைச் செருப்பு, முட்டை ஆகி யவை வீசப்பட்டன.

இந்த நிலையில், சென்னை நிகழ்ச்சியில் ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது என்று கமல் பேசி இருக்கிறார்.

"ஒரு முறை ரயில் பயணத்தின் போது தனது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்ததால் யாருக்காவது பயன்படட்டும் என்று தனது மற் றொரு செருப்பையும் கழற்றி வீசினார் மகாத்மா காந்தி.

"நான் காந்தியின் ரசிகன். ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும், அதற்காகக் காத்திருக்கிறேன். அந்த அருகதை எனக்கு உண்டு. இதில் எனக்கு வருத்தம் இல்லை. என் மீது செருப்பு வீசியவருக்குத் தான் அவமானமே தவிர எனக்கு அல்ல," என்று கமல் பேசினார்.