எம்எல்ஏ வீட்டருகே வெடித்த வெடிகுண்டு: ஒருவர் பலி; பெங்களூருவில் பதற்றம்

பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டின் அருகே குண்டு வெடித்த தில் ஒருவர் உயிரிழந்தார். இத னால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வருகிறார் எம்எல்ஏ முனிரத்னா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரைச் சந்திக்க தினமும் பலர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் எப்போதும் பர பரப்பாக இருக்கும் இவர்களது வீட்டின் அருகே நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்தது. அப் போது எம்எல்ஏ முனிரத்னா வீட் டில் இல்லை எனக் கூறப்படுகிறது. 

எனினும் இந்த குண்டு வெடிப் பில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தி ருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. அவரது பெயர் வெங்கடேஷ் என்றும் மேலதிக தகவல்கள் தெரியவில்லை என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த போலி சார், அப்பகுதியை தங்கள் கண் காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். மேலும் அப் பகுதி மக்களிடையே தீவிர விசாரணையும் நடைபெற்று வரு கிறது. வெடிகுண்டு நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு அப் பகுதியில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. வேறு இடங்களில் வெடி குண்டுகள் இருக்கலாம் என போலிசார் சந்தேகிப்பதாகவும் தெரிகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon