கூடுதல் லாபம் கிடைப்பதால் தங்கக் கடத்தல் 46% அதிகரிப்பு; சென்னை விமான நிலையத்தில் அதிக வெளிநாட்டினர் கைது

சென்னை விமான நிலையம் வழி யாக தங்கம் கடத்துவது ஆண்டுக் காண்டு அதிகரித்து வருவதாகவும் கடந்த 2017-18ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018-19ஆம் ஆண்டில் கடத்தல் சம்பவங்களின் எண் ணிக்கை 46 விழுக்காடு கூடிவிட்ட தாகவும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டைக்காட் டிலும் இந்த ஆண்டில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 109 கிலோ கடத்தல் தங்கம் கூடுதலாகக் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

தங்கத்தை மறைத்து எடுத்து வர பல்வேறு உத்திகள் கையாளப் பட்டு வருவதாகவும் குறிப்பாக உடல் பாகங்களுக்குள் மறைத்தும் பல்வேறு சாதனங்களுக்குள் ஒளித்துவைத்தும் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.300 முதல் ரூ.350 வரை கடத்தல் காரர்களுக்கு லாபம் கிடைக் கிறது. அதன்படி பார்த்தால் ஒரு கிலோ தங்கத்திற்கு கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் வரை அவர்கள் லாபம் பெறுகின்றனர்.

ஒரு கிலோ தங்கத்தின் சந்தை மதிப்பு சமார் 32.55 லட்சம் ரூபாய். அதற்கான சுங்க வரி (38.5%) 12.53 லட்சம் ரூபாய். சுங்க வரி யைச் செலுத்தாமல் ஏமாற்றுவதன் மூலம் ஒரு கிலோ தங்கத்துக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கிடைப்பதால் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

அத்துடன், விதிகளை ஏமாற் றும் தந்திரத்திலும் அவர்கள் ஈடுப டுகின்றனர். அதாவது, வேறொரு நாட்டிலிருந்து வரும் விமானப் பயணி வரி செலுத்தாமல் 20 லட் சம் ரூபாய் மதிப்புள்ள 615 கிராம் கொண்டு வந்தால் உடனடியாகக் கைது செய்யப்படுவார். எனவே, கிலோ கணக்கிலான தங்கத்தை 600 கிராம்களாகப் பிரித்து அதனை சென்னைக்குக் கொண்டுவருவதற் கான பயணிகளுக்கு வலைவீசுவர். அவ்வாறு கொண்டு வருபவர்க ளுக்கு சொற்ப பணம் கொடுக்கப் படும். அப்பணத்திற்கு ஆசைப்பட்டு யாருடையது என்றே தெரியாத தங் கத்தை சில பயணிகள் கொண்டு வருகின்றனர்.

ஒருவேளை அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் மாட்டிக்கொண் டாலும் கடத்தல்காரர்களுக்குக் கவலை இல்லை. காரணம் 20 பேரிடம் தங்கத்தைக் கொடுத்து விடும்போது அத்தனை பேரும் மாட்டிக்கொள்வதில்லை.

ஒருசிலரை அதிகாரிகள் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றினா லும் தப்பியவர்கள் மூலமாகக் கிடைக்கும் தங்கம் அவர்களுக்கு லாபம் ஈட்டித் தருகிறது.

முன்பெல்லாம் இந்தியப் பயணி களிடமே தங்கத்தைக் கொடுத்து அனுப்பி வந்த கடத்தல்காரர்கள் இப்போது வெளிநாட்டினரை பயன் படுத்துகின்றனர். தங்கத்தைக் கடத்தி வந்த குற்றத்திற்காக சென் னையில் பிடிபடும் வெளிநாட்டின ரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஐந்து வெளிநாட்டினர் பிடிபட்ட நிலையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 12க்கு அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவரும் பிரிட் டன், சீனா, கொரியா, தாய்லாந்து, சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அதேசமயம் தங்கத்தைக் கடத்திவரும் இந்தியர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது. இவ்வாண்டில் 65 இந்தியர்கள் சென்னையில் பிடிபட்டனர்.

அந்த எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டில் 69ஆக இருந்த து என்று 'டைம்ஸ் ஆஃப்' இந்தியா தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!