கமல்ஹாசனுக்கு முன்பிணை வழங்கிய உயர் நீதிமன்ற கிளை

கமல்ஹாசனுக்கு முன்பிணை வழங்கிய உயர் நீதிமன்ற கிளை

1 mins read
5ef3f6de-88cf-4822-95c1-728c72e5acff
கமல்ஹாசன் -

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு முன்பிணை வழங்கி மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தேர்தல் பிரசாரத்தின் போது கமல் ஹாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்துக் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக் குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்துத் தமக்கு முன் பிணை வழங்கக்கோரி கமல் ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந் தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன் பிணை வழங்கி தீர்ப்பளித்தது.