சென்னை: மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு திமுக இரட்டை வேடம் போடுவதாக தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
"வாழ்நாள் முழுவதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த பிரதமர் ராகுல்தான் என ஸ்டாலின் முதன்முதலாகத் தெரிவித்துவிட்டு, தேர்தல் முடியும்முன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்ததில் அவரது இரட்டை வேட நடிப்பு தெரிகிறது. வரும் 23ஆம் தேதிக்குப் பின் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தரமாட்டோம்," என்றார்.

