தூத்துக்குடி: தென்மாவட்டங் களில் முக்கிய தொகுதியான தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி எம்பியும் பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழிசையும் போட்டியிட்டனர். பிரசாரம் அனல் பறந்த தொகுதி களில் தூத்துக்குடியும் ஒன்று.
இவர்களுக்கு இடையே நிலவிய கடும் போட்டி எப்படி யிருக்கும் என தேர்தலுக்குப் பின்னர் தந்தி டிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், கனி மொழியே முன்னணியில் இருப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு 41-47% பேரும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு 35-41% பேரும் அமமுகவிற்கு 5-11% பேரும் வாக்களித்துள்ளதாகவும் தெரி வித்துள்ளனர்.

