சென்னை: முதல்முறையாக பொதுத் தேர் தலை சந்தித்துள்ள டிடிவி தின கரனின் அமமுக கட்சி 11% வாக்குகளைப் பெறும் என்று தேர்த லுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கணித்துள் ளன.
அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய டிடிவி தினகரனின் அமமுக இந்தத் தேர்தலில் 10.60% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் மத்தியில் அமையும் ஆட்சியை அமமுக தீர்மானிக்கும் என்று தெரி விக்கப்பட்ட நிலையில், நியூஸ் எக்ஸ் நிறுவனம் மட்டுமே அமமுக 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்தக் கட்சி இந்த கணிப்பில் 10.60% வாக்குகள் பெற்று அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக உள்ளது.
இதேபோன்று கட்சியைத் தொடங்கி முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 8.40% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

