புதுடெல்லி: தேர்தல் ஆணையம் என்பது முன்பு அச்சத்துடனும் மரியாதையுடனும் பார்க்கக்கூடிய அமைப்பாக இருந்தது என்றும், இனிமேல் அப்படி இருக்காது என்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளின் முடிவுக ளும் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடுகளை கடுமை யாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையம் பிரத மர் மோடியிடம் சரணாகதி அடைந்து விட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது அனைத்து இந்தியர்க ளுக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது என்றும் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தேர்தல் பத்திரங்கள், மின் னணு இயந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர் தல் தேதியை நிர்ணயித்தது, நமோ தொலைக்காட்சியை அனு மதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக் கொண்டது, இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் ஆணைய மானது, மோடி மற்றும் அவரது குழு முன்பு சரண் அடைந்து விட்டது," என்று ராகுல் தமது பதிவில் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக நடந்து கொண்டதாகவும் ராகுல் விமர்சித்திருப்பது அரசி யல் களத்தில் பரபரப்பையும் புதிய விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
இதேபோல் எதிர்கட்சிகள் சிலவும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி வந்தன.
இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளை விமர்சித்துள்ளார்.
தனது சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் தேர்தல் ஆணை யம் முற்றிலும் விட்டுக் கொடுத்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
"தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருந்தது என்பதுதான் நமது குற்றச்சாட்டாக இருந்தது. இப்போது, நாம் ஒருபடி மேலே சென்று, தனது அதிகாரத்தை விட்டுக் கொடுத்தது வெட்கக் கேடு.
"தேர்தல் முடிந்துவிட்டது. கடந்த இரு தினங்களாக மோடி மேற்கொண்ட புனிதப் பயணத்தில், மதமும், மத அடையாளங்களும் வாக்காளர்களைக் கவருவதற்காக ஏற்க முடியாத வகையில் பயன் படுத்தப்பட்டுள்ளன," என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

