புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறக்கும் படையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின் போது ரூ.3,449 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், மது வகைகள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1,206 கோடி மதிப்பிலான பொருட்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

