‘அரசியல்வாதிகளை ஊடகங்கள் சிறுமைப்படுத்துவது முறையா?’

மைசூர்: அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்யும் ஊடகங் களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிப்பதாக கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

“அரசியல்வாதிகள் வேலையில்லாமல் இருப்பதாக நினைக்கிறீர்களா? நாங்கள் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள் போல் காட்சி தருகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? எங்களை சிறுமைப்படுத்துவதற்கு நீங்கள் யார்?” என்று முதல்வர் குமாரசாமி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.