புதுடெல்லி: இந்தியர்களில் பலரும் தங்கநகைப் பிரியர்களாக உள்ள நிலையில், பெரும்பாலான குடும்பத் தில் ஏராள அளவில் தங்க நகை இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள் ளன.
உலக மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய, விலை மதிப்பற்ற உலோகமான தங்க நகை கையிருப்பு இந்தியக் குடும்பங்களில் 25,000 டன்னாக உயர்ந்திருப்பதாக உலக தங்கக் கவுன்சில் மதிப்பீடு தெரிவித் துள்ளது.
இதுகுறித்து, கவுன்சிலின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்கு நர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு ஆண்டு களுக்கு முன் இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க ஆபரணங்கள் குறித்து உலக தங்கக் கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது.
"அப்போது இந்திய குடும்பங் களில் 23,000 முதல் 24,000 டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட் டது. ஆனால் இந்த அளவு தற் போதைய ஆய்வில் 24,000 முதல் 25,000 டன்னாக உயர்ந்திருப்ப தாக கணிக்கப்பட்டுள்ளது.
"கடந்த ஆண்டு இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 760 டன் னாக இருந்தது. இது இந்தாண்டு 750 முதல் 850 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந் நியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ள அதே வேளையில் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.
"இதனால் இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண் டில் தங்கத் தேவை 5% அதிகரித்து 159 டன்னாக உயர்ந்தது.
"அக்ஷய திருதியை, திரு மண நேரம் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு பருவமழை நன்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளதால் கிராமப்புற பொருளியல் வளர்ச்சி அடைந்து தங்க விற்பனை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

