சென்னை: பாஜகவுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகள் நடுநிலையுடன் இல்லை. பாஜக ஏற்பாடு செய்து எடுத்ததுபோல் உள்ளது. இது ஏற்புடையதாக இல்லை. அதேபோல் அதில் நம்பகத்தன்மையும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவ னில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி கூறுகையில், "இந்திய ஊடகங்கள் பலவும் இணைந்து வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவின் ஏற்பாடாகவே தெரிகிறது.
"பிரதமர் மோடிக்கு ஜனநாய கத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் வாக்கு எண்ணிக்கை யின்போது அவர் எந்த அத்துமீற லிலும் இறங்குவார். எனவே காங் கிரஸ் கட்சியினர் மிகுந்த விழிப் புடன் இருக்கவேண்டும்.
"மக்களவைத் தேர்தல் வெற்றி கரமாக நடந்து முடிந்துள்ளது. வரலாற்றில் பொன்னெழுத்து களால் எழுதக்கூடிய வகையில் மாற்றம் வர உள்ளது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் கருத்துக் கணிப்பு என்ற தவறான தகவல்களைப் பரப்பி உள்ளனர்.
"இந்த தேர்தல் மூலம் மோடி இல்லாத ஓர் அரசுதான் அமையும். தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெறும்.
"மொத்தமே 11,000 பேரிடம் தான் கருத்துகளைக் கேட்டுள்ள னர். அதாவது, ஒரு தொகுதிக்கு 28 பேரிடம்தான் கருத்து கேட்கப் பட்டுள்ளது. எனவே பாஜகவுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.
"தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நான் குடியிருக்கும் நந்தனம் பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மஞ்சள் உள்பட பல நிறங்களில் வருகிறது. அதில் குளித்தால் நோய்கள் வரும் என்பது தெரிந் திருந்தும் தமிழக அரசு முன் கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது," என்றார் கே.எஸ்.அழகிரி.
இதற்கிடையே தேர்தல் கருத் துக் கணிப்புகள் மாறும் என்று முன்னாள் பிரதமரும் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா தெரி வித்துள்ளார்.
கும்பகோணம், மன்னார்குடி ஆலயத்தில் தரிசனம் செய்தபின்பு தேவகவுடா அளித்த பேட்டியில், "கருத்துக் கணிப்புகளை நடத்து வதற்கும் சொல்வதற்கும் அனை வருக்கும் சுதந்திரம் உள்ளது. அவ்வகையில் இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக் கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், கருத் துக் கணிப்புகள் முற்றிலும் மாறு படும்," என்று அவர் கூறினார்.
கர்நாடகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறுகை யில், "கர்நாடகாவில் போதுமான அளவில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. மழை பெய்து அணைகள் நிரம்பினால், தமிழகத்திற்குத் தண்ணீர் தரப்படும்," என்றார்.

