சென்னை: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்குப் பிறகே தெரியவரும் என்றும் தமிழகத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும் என்றும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் முதலில் அஞ்சல் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப் படும். முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

