சென்னை: பாஜக அமைச்சர வையில் இடம்பெறுவது குறித்து நாளை 23ஆம் தேதி நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வா கிகள் கூட்டத்தில் முடிவு எடுக் கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனையில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
"பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளிலும் 22 சட்டமன்றத் தொகுதிகளி லும் அதிமுகவே வெற்றி பெறும்," என்றார்.

