திரண்டு வந்து வாக்களித்த பெண்கள்

திரண்டு வந்து வாக்களித்த பெண்கள்

1 mins read

இந்நிலையில், யூனியன் பிர தேசங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 13 மாநிலங்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகளவில் திரண்டு வந்து வாக்களித்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஐந் தாண்டுகளுக்கு முன்னர் பத்து மாநிலங்களில் பெண்கள் அதிக மாக வாக்களித்திருந்தனர்.

ஆனால், அப்போது தெலுங் கானா மாநிலம் உருவாகுவதற்கு முன் ஒன்றிணைந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் இருந்தது. எனவே 2014 தேர்தலில் பெண்கள் அதிகம் வாக்களித்த மாநிலங் களின் எண்ணிக்கையை 11ஆக எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது நடந்து முடிந் திருக்கும் தேர்தலில் தமிழகத்தில் 21.32 மில்லியன் பெண்கள் வாக் களித்தனர்.

அதேசமயம் வாக்களித்த ஆண்களின் எண்ணிக்கை 20.76 மில் லியனாக இருந்தது.

கேரளாவில் 97 லட்சம் ஆண்களும் 10.61 மில்லியன் பெண்களும் வாக்களித்துள்ளனர்.