ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

1 mins read

அகமதாபாத்: பாகிஸ்தான் மீன்பிடிப் படகு ஒன்றில் கடத்தப்பட்டு வந்த ரூ.500 கோடி மதிப்புடைய போதைப் பொருளை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய் தனர்.

குஜராத் மாநிலம், ஜக்காவ் கட லோரம் அனைத்துலக கடல் எல் லைப் பகுதிக்கு அருகே போதைப் பொருளைக் கைமாற்றி விடுவதற் காக பாகிஸ்தான் மீன்பிடிப் படகு ஒன்று காத்துக்கொண்டிருப்பதாக வேவுத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் படகை வழிமறிப்பதற்காக ஒரு கப்பலையும் இரு இடைமறிப்புப் படகுகளையும் இந்தியக் கடலோரக் காவல்படை அனுப்பியது. அந்த பாகிஸ்தான் படகை கடலோரக் காவல்படை யினர் விரட்டிப் பிடித்தனர்.

அவர்களிடம் மாட்டிக்கொள் ளாமல் இருப்பதற்காக அப்படகில் இருந்தவர்கள் சந்தேகப்படும்படி யான பொருட்கள் அடங்கிய பை களைக் கடலுக்குள் வீசியெறிந் தனர். இருப்பினும், படகில் இருந்த வர்களைத் தங்களது பிடிக்குள் கொண்டுவந்த கடலோரக் காவல் படையினர், கடலில் வீசப்பட்ட ஏழு பைகளையும் மீட்டனர்.

அவற்றுள் இருந்த ஒரு பொட் டலத்தைச் சோதித்துப் பார்த்த அதிகாரிகள், அது போதைப் பொருள் என்பதை உறுதிப்படுத் தினர். மொத்தம் 194 போதைப் பொருள் பொட்டலங்கள் இருந்த தாகவும் அவற்றின் மதிப்பு ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டது.