இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலம், மேற்கு கோன்சா சட்ட மன்றத் தொகுதியின் எம்எல்ஏ வான திரோங் அபோ காரில் சென்றுகொண்டிருந்தபோது பயங் கரவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தத் துப்பாக் கிச்சூட்டுச் சம்பவத்தில் அவரது குடும்பத்தினர் உட்பட மேலும் அறுவர் கொல்லப்பட்டனர்.
பின் அபோவின் காரையும் பயங்கர வாதிகள் தீயிட்டுக் கொளுத் தினர். அவரின் தனிச் செயலாளர் உயிருக்குப் போராடி வருவதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவத் திற்கு மேகாலயா மாநில முதல்வர் கொன்ராட் சங்கா கடும் கண் டனம் தெரிவித்ததோடு, மத்திய அரசு விரைந்து செயல்பட்டு கொலைக்குக் காரணமானவர் களைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

