சுடச் சுடச் செய்திகள்

மோடி மீது கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை

இந்தியத் தலைவர் நரேந்திர மோடி, இனி வரப்போகும் தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த முடிவுகள் பாரதிய ஜனதாவுக்குச் சாதகமாக அமையும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து இந்தக் கட்சிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.

இந்தச் சந்திப்பு டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. ராஜ்நாத் சிங், நித்தின் கட்காரி, அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தத் தேர்தலில் வெற்றி பாரதிய ஜனதாவுக்கே என்று சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்த எதிர்க்கட்சியினரை பாரதிய ஜனதா குறைகூறியுள்ளது. தேர்தலில் தோற்க நேரிட்டால் எதிர்க்கட்சிகள் அந்தத் தோல்வியைப் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சார்பில் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon