பெருவணிகர் அனில் அம்பானியின் 'ரிலாயன்ஸ்' குழுமம், காங்கிரஸ் தலைவர்களுக்கும் 'நேஷனல் ஹெரால்ட்' நாளிதழுக்கும் எதிரான தமது அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது. ரஃபேல் போர் விமானம் குறித்து அந்தக் கட்சியினர் கூறிய வாசகங்களும் 'ஹெரால்ட்' நாளிதழில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளும் பொதுத்தேர்தலில் தங்கள் அரசியல் ஆதாயத்திற்கானவை என நம்புவதாக அந்தக் குழுமம் கூறுகிறது. பிரான்ஸிடமிருந்து போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் மூலம் திரு அம்பானியின் நிறுவனம் 30,000 கோடி ரூபாய் ஆதாயம் அடைந்ததாகவும் திரு ராகுல் கூறினார். இவ்வாறு அவர் சொன்னதற்காகத் திரு அம்பானி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பில் 'நேஷனல் ஹெரால்ட்' நாளிதழில் வெளிவந்த சில செய்திக் கட்டுரைகள் 'ரிலாயன்ஸ்' குழுமத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் காட்டுவதாக அந்தக் குழுமம் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வழக்குகளை மீட்டுக்கொள்ளும் அனில் அம்பானி
1 mins read
-

