சுடச் சுடச் செய்திகள்

புதிய செயற்கைக்கோளைப் பாய்ச்சியது இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ‘ரீசாட்-2பிஆர்’ என்ற செயற்கைக்கோள் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 5.30 மணிக்கு இந்தச் செயற்கைக்கோள் ‘சி-46’ ராக்கெட் ஏவுகணை வாயிலாகப் பாய்ச்சப்பட்டது. இது இந்திய உளவுப் பணிகளுக்குக் கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆகாயத் தாக்குதல்கள் நிகழும்போது என்ன நடந்தது என்பது பற்றிய சந்தேகங்களை நிவர்த்திசெய்ய இந்தச் செயற்கைக்கோள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வமைப்பு இதுவரை 354 விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. புதிதாக அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் எந்த வானிலையிலும் இந்தியாவுக்குக் கண்களாகச் செயல்படும் என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆய்வகத்தைப் பாராட்டும் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon