மக்களுக்கு எதிரான திட்டங்களில் சமரசம் இல்லை என்கிறது பாமக

மக்களுக்கு எதிரான திட்டங்களில் சமரசம் இல்லை என்கிறது பாமக

1 mins read

புதுடெல்லி: தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு எதிரான திட்டங்களில் கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்றார். குடிநீர் மற்றும் நீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளைத் தாம் மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என மத்திய, மாநில அரசை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

"அதிமுக கூட்டணியில் இருந்தாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், எங்கள் கொள்கைகளில் மாற்றமில்லை. 50 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தீரும்," என்றார் அன்புமணி.