'தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் பொய்த்தகவல்'

'தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் பொய்த்தகவல்'

2 mins read

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி காரணமாக பாஜக ஆட்சியமைக்க திமுக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாகக் கருத வேண்டி உள்ளது என அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் அளித்த அண்மைய பேட்டி திமுக, காங்கிரஸ் வட்டா ரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

குறிப்பாக, மத்தியில் அடுத்து எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அதில் பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கு, அவர் நேரடியாக பதில் அளிக்க மறுத்தார்.

"23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு எனது விளக்கத்தை அளிக்கிறேன்," என்றார் ஸ்டாலின்.

இம்முறை காங்கிரசுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது திமுக. எனவே காங்கிரசுக்கு மத்தியில் ஆதரவு அளிப்போம் என்று பதிலளிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் தமது முடிவை 23ஆம் தேதி தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே அடுத்து மத்தியில் ஆட்சியமைக்க பாஜக ஆதரவு கோரினால், அதை திமுக தலைமை பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர் கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பதையும் அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஏற்கெனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டார். அவரையும் அண்மையில் ஸ்டாலின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக தமிழக காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தாக நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் இதை மறுத்தார். மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் இவ்வாறு தகவல் பரப்பிய தாக அவர் குறிப்பிட்டார். இந் நிலையில் இது குறித்து போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.