காஞ்சிபுரம்: மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியை பிரதமர் மோடி விமர்சனம் செய்தது மிகவும் கீழ்த்தரமான செயல் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைகீழாக நின்றாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டார்.
கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. மீதமுள்ள இரண்டு ஆண்டுகளிலும் இதே நிலைதான் தொடரும். இந்த மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்," என்றார் திருநாவுக்கரசர்.

