சென்னை: மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்து 22 கட்சிகள் கலவர சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சிகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 தேர்தல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடைபெற்றது என்றும் அப்போது பாஜகவோ, அதன் கூட்டணிக் கட்சிகளோ மக்களிடம் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசவில்லை என்றும் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மேலும் அச்சமயம் பாஜக தன் கூட்டணிக் கட்சிகளுடன் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோ, தேர்தல் ஆணையரிடம் சென்றோ தேவையின்றி கூச்சல் ஏதும் எழுப்பவில்லை," என்று எச்.ராஜா தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

