சுட்டெரிக்கும் வெயிலுக்கு  12 பேர் உயிரிழப்பு

நகரி: ஆந்திர மாநிலத்தில் சுட் டெரிக்கும் வெயிலின் கொடுமை தாளமுடியாமல் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அறுவர் உயிரிழந்ததாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த வெப்பக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பொதுமக்களை பீதிய டையச் செய்துள்ளது.

விஜயநகரத்தில் இருவரும் விசாகப்பட்டினம், கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகினர்.

அத்துடன் வெயிலால் பாதிக் கப்பட்ட 340 பேர் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரு கின்றனர்.

ஆந்திராவின் பல மாவட்டங் களிலும் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்களால் வெளியே வரமுடியவில்லை.

நேற்று அதிகபட்சமாக பிர காசம் மாவட்டம், பாதிரி பேட்டில் 114.26 டிகிரி வெயில் பதிவானது

நெல்லூர் வெங்கடகிரியில் 113.36 டிகிரியும் சித்தூர் தொட்டம் பேடு, குண்டூர் மச்சவரத்தில் 113.18 டிகிரியும் கடப்பா மாவட்டத்தில் முட்டனூரில் 113 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் ஆந்திராவில் வரும் 25ஆம் தேதி முதல் 5 நாட் களுக்கு வெப்பக் காற்று கடுமை யாக வீசும் என்று அம்மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல இந் திய வானிலை மையமும் வெப்ப காற்று குறித்து எச்சரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!