இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

1 mins read

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடந்த சண்டையில் இரு பயங்கர வாதிகளைப் பாதுகாப்புப்படை யினர் சுட்டுவீழ்த்தினர்.

காஷ்மீரின் குல்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் பயங் கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தக வல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியைப் பாதுகாப்புப் படை யினர் நேற்று சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத் தியபோது பாதுகாப்புப் படையின ரும் பதிலடி கொடுக்க இரு பயங் கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, ஜம்மு காஷ் மீரின் ரம்பான் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் திடீரென நடத்திய வாகனச் சோதனையில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 650 கிலோ பாப்பி விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எண் ணெய் டாங்கர் ஓட்டுநர் உட்பட உடனிருந்தவர்கள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடினர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

இதனையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்து, தப்பியோடிய கடத்தல்காரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இக்கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் திரிபுரா மாநிலத்தில் கைலஷ்னகர் பகுதியில் நேற்று 518 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.