வெயிலில் இருந்து காரைப் பாதுகாக்க சாணிப் பூச்சு   

அகமதாபாத்: இந்தியாவில் நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் பல்வேறு உத்தி களைக் கையாண்டு வருகின்றனர். சிலர் துணிகளால் முகம், தலை யைப் போர்த்திச் செல்கின்றனர். சிலர் குடை கொண்டு செல்கின் றனர். உடலைப் பாதுகாக்க மக் கள் நுங்கு, இளநீர், தர்ப்பூசணிப் பழத்தையும் நாடிச் செல்கின்றனர்.

இந்நிலையில், அஹமதாபாத் தைச் சேர்ந்த ஒரு பெண் தனது காரை வெப்பத்தில் இருந்து பாது காக்கவும் காரினுள் குளுமை யாக இருக்கவும் காரின் வெளிப் புறம் முழுவதும் பசுவின் சாணத் தால் மெழுகியுள்ளார்.

குஜராத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் 107 டிகிரி வெப்பம் கொளுத்துகிறது.

காருக்குள் குளிர்சாதன வசதி இருந்தாலும் காற்று வெப்பமாகவே உள்ளது. இதைத் தவிர்க்க காரின் உரிமையாளர் ஒருவர் காரின் மீது சாணத்தால் மெழுகி புதுமையான உத்தியைக் கையாண்டுள்ளார்.

இந்த சாணம் பூசப்பட்ட காரின் புகைப்படத்தை ரூபேஷ் கவுரங்கா தாஸ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.

இந்தப் படம் தனக்கு வாட்ஸ் அப்பில் வந்ததாகவும் சிஜல் ஷா என்ற பெண்ணுக்கு அந்தக் கார் சொந்தமானது என்றும் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள ரூபேஷ்,

"மாட்டுச்சாணத்தை இதுபோன்று யாரும் சிறப்பாகப் பயன்படுத்தி பார்த்ததில்லை," என்றும் பதிவிட் டுள்ளார்.

காருக்கு சிஜல் ஷா மாட்டுச் சாணம் பூசியுள்ளதை சிலர் கேலி செய்துள்ளனர். சிலர் அவரது புத்திக்கூர்மையைப் பாராட்டி யுள்ளனர். இந்த சாணம் பூசப்பட்ட காரின் புகைப்படம் சமூக ஊட கங்களில் பரவி வருகிறது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!