இந்தியாவின் நாணய மதிப்பும் முறிகளின் வட்டி விகிதமும் இன்று காலை கூடியுள்ளன. அந்நாட்டுப் பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இந்திய நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய 69.675லிருந்து இன்று காலை 69.54க்கு உயர்ந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்திய முதலீட்டாளர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பை இந்த மாற்றம் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
பாஜகவின் வெற்றியை எதிர்பார்க்கும் இந்திய நிதிச்சந்தைகள்
1 mins read
-

