சுடச் சுடச் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய நாடாளுமன்றத்திற்கு 42 உறுப்பினர்களை அனுப்பும் மேற்கு வங்காள மாநிலம், முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  

இந்திய நேரப்படி காலை 10 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களைப் பெற்றிருப்பதாகவும் பாரதிய ஜனதா 17 இடங்களைப் பெற்றிருப்பதாகவும் அண்மைத் தகவல்கள் கூறுகின்றன. இந்த முன்னிலையை திரிணாமுல் காங்கிரஸ் தக்கவைத்தால் மம்தா பானர்ஜி தொடர்ந்து மாநில முதல்வராக இருப்பார்.

தேர்தல் தொடர்பான வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon