இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்திய நேரப்படி காலை 10.30 மணி நிலவரப்படி, பாஜக 48 இடங்களைப் பெற்றிருக்கிறது. பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணி 14 இடங்களை மட்டும் பெற்றுள்ளது . இன்று வெளிவரும் முடிவுகள் இந்தியாவின் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. திரு மோடியின் தேசிய அளவிலான நம்பகத்தன்மைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ஈடுகொடுக்க முடியவில்லை என்று மக்கள் நினைத்திருக்கலாம் என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர் திரு மோடியின் ஈர்ப்புத்தன்மை, அவரது பேச்சுத்திறன், பாகிஸ்தானுக்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாடு ஆகியவை இந்தத் தேர்தலில் அவருக்குக் கைகொடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணிக்குப் பின்னடைவு
1 mins read
-

