அதிமுக ஆட்சிக்கு ஆபத்து விலகியது

அதிமுக ஆட்சிக்கு ஆபத்து விலகியது

1 mins read
decebef9-f02c-471a-b1e7-fb54842aa535
-

தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் அதிமுக ஒன்பது தொகுதிகளில் முன்னி லையில் இருப்பதால் இன்னும் ஈராண்டுகளுக்கு அக்கட்சியின் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கி விட்டது.

மொத்தம் 234 உறுப்பினர் களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருடன் சேர்த்து அதிமுகவுக்கு 114 உறுப் பினர்களின் ஆதரவு இருந்தது. அதனால், மேலும் ஐந்து தொகு திகளில் வென்றாலே அக்கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றாலே போதும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், ஒன்பது தொகுதி களில் வென்றிருப்பதன்மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 122ஆக அதிகரித்துள்ளது.

திமுகவின் பலம் 102 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் வசம் எட்டுத் தொகுதிகள் இருந் தன. இருப்பினும், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிமுகத்துடன் இருக்கும் வசந்தகுமார் நாடாளு மன்றத்திற்குச் சென்று விட்டால் அவர் எம்எல்ஏவாக இருந்த நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காலியாகிவிடும். அதன் பின் தமிழக சட்டமன்றத்தில் காங்கிர சின் பலம் ஏழாகக் குறையும்.

அதிமுகவை எப்படியும் ஆட்சி யைவிட்டு அகற்றுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட் சிக்குப் பெருத்த ஏமாற்றமே மிஞ் சியது. சட்டமன்ற இடைத்தேர் தலிலும் நாடாளுமன்றத் தேர்தலி லும் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரித்துவிடும் என்ற கணிப்புகள் பொய்த்துப்போயின.