தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கனிமொழி (தூத்துக்குடி), தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை) ஆகி யோர் முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர்களில் முக்கிய மானவர்கள். கடந்த 2014 பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளைக் கைப்பற்றிய அதிமுக, இம்முறை பாஜகவுடன் இணைந்து போட்டி யிட்டும்கூட ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றிருந் தது. தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
தருமபுரி தொகுதியில் போட்டி யிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஏறத்தாழ 60,000 வாக்குகள் பின்தங்கி இருந்தார்.

