சென்னை: அதிமுக, திமுக ஆகிய இருபெரும் கட்சிகளுக்கு அடுத்த மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுக்க நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள்
தயாராகி வருகின்றன.
மாபெரும் மாற்று சக்தியாக நாம் தமிழர் கட்சியின் சீமானும், மநீம கட்சியின் தலைவர் கமல் ஹாசனும் மாறிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி தொகுதியில் பெரிய கட்சிகளுக்கு கடும் போட்டியளித்து முன்னோக்கி வந்துள்ளது நாம் தமிழர், மநீம கட்சிகள்.
திமுக, அதிமுகவை போலவே ஒரு செல்வாக்குமிக்க நபரை தனது கட்சி சார்பில் நிறுத்த முடிவுசெய்த டிடிவி தினகரன், அதன்படி சாருபாலா தொண்டை மானை களம் இறக்கினார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் விஜயகுமார் களம் இறங்கினார். இவருக்கு இது சொந்த தொகுதிதான்.
தேமுதிகவுக்கு இங்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்றும் நம்பப்பட்டது. இப்படி அதிமுக, திமுக, அமமுக தரப்பில் ஜாம்பவான்கள் களமிறங்கினர்.
ஆனால் இவர்களைத் தவிர்த்து இந்த பட்டியலில் இல்லாத நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யமும் இந்தப் பிரம்மாண்ட கட்சிகளுக்கு கடும் போட்டி கொடுத்துள்ளன.
வாக்கு எண்ணிக்கையில் திமுக, தேமுதிக, அமமுக வேட் பாளர்களுடன் போட்டியிட்டு 22,216 வாக்குகள் பெற்று மக்கள் நீதி மய்யம் அதிரவைத்துள்ளது. அதேபோல 28,449 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சியும் சரிக்கு சரியாக போட்டிப் போட்டு மேலே வந்துள்ளது.
கமலும், சீமானும் ஒட்டுமொத்த திருச்சி தொகுதி வாக்குகளைப் பிரித்துள்ளனர். அதாவது அதிமுகவை வெல்லவிடாமல் இவ்விருவரும் தடுத்துள்ளனர்.

