திமுக அமோக வெற்றி

திமுக அமோக வெற்றி

2 mins read

சென்னை: தமிழகத்தில் வேலூ ரைத் தவிர்த்து 38 தொகுதி களுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட் டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

1996க்குப் பிறகு திமுக கூட் டணி மீண்டும் இப்போது தமிழ கத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள அதேவேளையில் அதி முகவும் பாஜக கூட்டணியும் பலத்த சரிவைச் சந்தித்துள்ளன.

தமிழகத்தில் கடந்த முறை அதிமுக பெற்றிருந்த வெற்றியைப் போன்று இம்முறை திமுக மகத் தான வெற்றி பெற்றுள்ள போதிலும் இந்த வெற்றியால் பெரும்பலன் எதையும் பெற்றுவிட முடியாத நிலையில் திமுக தலைவர் ஸ்டா லின் உள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவ்வளவு இடங்களில் திமுக வெற்றிவாய்ப்பை எட்டினாலும் மத்தியில் திமுக ஆதரவு இல் லாமல் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் திமுகவுக்கு எந்தப் பலனும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

"பாஜகவுக்கு எதிராக கடுமை யான பிரசாரத்தை முன்வைத்த திமுகவால் பாஜகவுடன் கை குலுக்கமுடியாது. ஆட்சி, அதி காரத்தில் பங்குபெற முடியாது. தமிழகத்தில் அனைத்து இடங் களில் வெற்றி பெற்றபோதும், திமுகவால் மாநிலத்திற்கு பெரிய அளவில் நன்மைகளைப் பெற்றுத் தரமுடியுமா என்பதை பொறுத் திருந்து பார்க்கவேண்டும்," என் கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபின்னர் தனது பலத்தை நிரூபிக்க ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பை ஸ்டாலினும் நன்றாக பயன்படுத்தி, திமுகவுக்குத்தான் ஒரு வலிமை வாய்ந்த தலைவர் என்பதை நிரூபித்துள்ளார்.

கடந்த முறை ஜெயலலிதாவை எதிர்த்து எப்படி பாஜகவால், தமிழ கத்தில் அரசியல் செய்ய முடிய வில்லையோ, அதேபோல் இப் போதும் திமுகவை எதிர்த்துப் பாஜகவால் தமிழகத்தில் அரசியல் செய்யமுடியவில்லை என்பது உறுதியாகியாகி உள்ளது.

மோடியா... லேடியா என்று ஜெயலலிதா 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மக்க ளிடையே கேள்வி கேட்டார். லேடி தான் வேண்டும் என்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள், 37 தொகுதி களில் வெற்றியை அள்ளித் தந்தனர். அந்தத் தேர்தலில் திமுக மொத்தமாக தோல்வி அடைந்தது. இப்போதைய 2019ம் தேர்தலில் அது அப்படியே மாறி வந்துள்ளது.

கஜா புயல் தாக்கிய சமயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை, மக்களைக் கடும் அதிருப்திக்குள் ளாக்கியது. மக்களின் நாடித் துடிப்பை சரியாக கணிக்காத பாஜக, 2வது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றும் தமிழகத்தில் அதிக தொகுதிகளைப் பெறமுடியாமல் கோட்டை விட்டுள்ளது.