தந்தையின் நிழலிலிருந்து வெளிவந்த தலைவர்

தந்தையின் நிழலிலிருந்து வெளிவந்த தலைவர்

1 mins read
3ef1d3e5-792b-4c95-8c01-dc7ac4c06e34
-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் காலஞ்சென்ற பழம்பெரும் தலைவர் மு.கருணாநிதி வாழ்ந்திருந்தபோது அவரது மகன் மு.க. ஸ்டாலின் தனித்துத் தலைவராக மிளிர முடியவில்லை என்று சிலர் கருதியிருக்கலாம். ஆயினும், கருணாநிதியும் அதிமுகவின் புகழ்பெற்ற தலைவர் ஜெ. ஜெயலலிதாவும் காலமான பிறகு தமிழகத்தில் நடந்துள்ள முதல் தேர்தலில் தம்மால் தலைவராக வெல்ல முடியும் என ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். மாநில சட்டமன்றத்தில் திமுக 22 இடங்களில் 13 இடங்களைப் பெற்றிருந்தபோதும் மாநில அளவில் அதிமுகவைக் கவிழ்க்க அந்த எண்ணிக்கை போதவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக 37 இடங்களைப் பெற்றிருந்தாலும் அங்கு பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் பட்சத்தில் திமுகவால் அதிகம் செய்ய முடியாது. தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் இடைத்தேர்தல் மீதே அதிக கவனம் செலுத்தி வந்ததாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்கப்போகும் பழனிசாமி, தனக்கான ஆதரவை முடுக்கப் பல்வேறு வழிகளை ஆராயவேண்டியுள்ளது.