சென்னை: இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அதிக எம்.பி.க் களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக கடந்த ஐந்து ஆண்டு காலம் அதிமுக இருந்தது. அந்தப் பெருமை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திமுகவிடம் செல்லவிருக்கிறது.
தமிழகத்தில் தேனி மக்கள வைத் தொகுதியைத் தவிர்த்து மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக 2014 பொதுத் தேர்த லில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை சரிபாதி இடங்களை விட்டுத் தந்த திமுக, தான் போட்டியிட்ட 19 இடங்களிலும் வாகை சூடியது. அதோடு, திமுக வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் நால்வரும் வென்ற தால் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் பலம் 23ஆக உள்ளது.
இதனால், பாஜக (303), காங் கிரஸ் (52) ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதி களைக் கைப்பற்றிய கட்சி என்ற பெருமை திமுக வசமாகியுள்ளது.
இந்த அபார வெற்றியை அளித்த தமிழக வாக்காளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
"தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்து உள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்நா ளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளைக் காக்க என்றும் குரல் கொடுப்போம்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக் கூறிக்கொண்ட அவர், ஜனநாயக முறைப்படி மோடி ஆட்சி நடத்து வார் என நம்புகிறோம் என்றும் சொன்னார்.
தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனைத் தோற்கடித்து முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றார் திமுக வின் கனிமொழி. இதையடுத்து, அவர் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காலஞ் சென்ற தம்முடைய தந்தையும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சமாதியில் வெற்றிச் சான்றிதழை வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் தமக்குப் பெரும் வரவேற்பு அளித்த திமுக தொண் டர்கள் மத்தியில் பேசிய அவர், "திமுகவிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தமிழகத்தின் உரிமை களுக்காகப் பயன்படுத்துவோம். தூத்துக்குடி மக்களின் குரலாக என்னால் முடிந்த அளவிற்கு நாடாளுமன்றத்தில் பணியாற்று வேன்," என்றார்.
திமுக எம்.பி.க்கள் கூட்டம்
இந்நிலையில், திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை பத்து மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், தமிழகப் பிரச்சினைகள் குறித்து எவ்வாறு விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

