சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டும் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற வில்லை.
அதிலும் பாமகவின் கோட்டை எனக் கருதப்படும் தருமபுரியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தோற்றதால் அக்கட்சியினர் பேரதிர்ச்சி அடைந் தனர்.
முன்னதாக, தேர்தல் கூட்டணி யின்போது பாமகவுக்கு நாடாளு மன்ற மேலவையில் ஓர் இடம் தருவதாக அதிமுக உறுதியளித் திருந்தது. ஆகையால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்.பி. ஆகி மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிடலாம் என அன்புமணி திட்டமிட்டிருந்தார்.
மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் தேமுதிக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கி தனக்குக் கைகொடுக்கும் என அதிமுக நம்பியிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.
இதனால், சொன்னபடி பாமகவிற்கு மாநிலங்களவையில் ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சொன்னபடி பாமகவிற்கு மேலவையில் இடம் தர மறுத்தது நினைவிருக்கலாம்.

