மம்தாவின் ஆட்சிக்கு சோதனை

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் அண்மைய தேர்தலில் இடதுசாரிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து மொத்தமுள்ள 42 இடங்களில் 18ஐக் கைப்பற்றி அங்கும் தனது கொடியை நாட்டியது பாஜக. அங்கு தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய திரு மோடி, திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 40  பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று கூறி இருந்தார்.

பாஜகவை வலுவாக எதிர்க்கும் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்கு வங்கத்தில், திரிணாமூல் கட்சியை உடைத்து மாநில ஆட்சிக்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கக்கூடும் என்று சிலர் கருத்து உரைத்துள்ளனர். அங்கு மம்தா முதல்வராக இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.