அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பின் தலைவன் காஷ்மீரில் சுட்டுக்கொலை

புதுடெல்லி: இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் பாது காப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்புடைய போராளித் தலை வன் ஸாகிர் மூசா கொல்லப்பட்டான். காஷ்மீரிலும் இந்தியாவிலும் இஸ்லாமிய பேரரசை அமைக்க மூசா பிரசாரம்  செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. அன்சார் ஹஸ்வாட்-உல் ஹிந்த் (ஏஜியுஎச்) அமைப்பின் தலைவன் மூசா. புல்வாமா வட்டாரத்தில் டிரால் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சிக்கிக்கொண்ட மூசாவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 

பெரிதும் தேடப்பட்டு வந்த போராளியான மூசாவின் மரணம் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

கடந்த 18 நாட்களில் 16 போராளிகளைப் பாதுகாப்புப்படை யினர் சுட்டுக் கொன்றதாக என்டிடிவி செய்தி வெளியிட்டது. 

பொறியியல் படிப்பைப் பாதியில் கைவிட்ட மூசா 2013ம் ஆண்டில் போராளிக் குழுவுடன் இணைந் தான். சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானி எனும் போராளித் தலைவனுடன் மூசா நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது. அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஏஜியுஎச் அமைப் புக்குத் தலைமைதாங்கும் பொருட்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பிலிருந்து மூசா விலகிய தாகக் கூறப்பட்டது. 

நேற்று அந்தப் பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டதுடன் இணையச் சேவையும் முடக்கப் பட்டது. மூசா மாண்டதையடுத்து வன்முறை வெடிப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு