சுடச் சுடச் செய்திகள்

‘மோடி 2.0’ அரசின் ஆயிரம் நாள் திட்டம்

இந்தியாவில் இரண்டாவது முறை பிரதமர் பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடி மக்கள் நலனுக் கான பெருந்திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினம் 2022ஆம் ஆண் டில் கொண்டாடப்பட உள்ள நிலை யில் அதுவரையில் செயல்படுத்தக் கூடிய ஆயிரம் நாள் திட்டம் ஒன்றை அவர் தீட்டி இருப்பதாக அதுகுறித்து அறிந்த இருவர் தெரிவித்துள்ளனர். 

மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் பாதி வரை செயல்படுத்துவதற்கான திட்டங் கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 

விவசாயம் செய்துவரும் பெண் களுக்கு அதிகாரம் வழங்குவதில் தொடங்கி விண்வெளிக்கு இந்தி யரை அனுப்புவது வரையிலான திட்டங்கள் அவை. தமது இரண் டாவது ஆட்சிக் காலத்திற்கு ‘புதிய இந்தியா’ என்ற பெயரைச் சூட்டி இருக்கும் திரு மோடி அதற்கேற்ற வகையில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற இருப்பதாக அவ்விரு வரையும் மேற்கோள் காட்டி ‘இந் துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளி யிட்டுள்ளது.

“அடுத்த ஐந்தாண்டுகளின் முதல் ஆயிரம் நாட்களுக்கான திட்டங்களை வரையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள் ளோம். புதிதாக உருவாக்கப்படும் திட்டங்களை 2022ஆம் ஆண்டுக் குள் நிறைவேற்றும் வகையில் புதிய அமைச்சர்கள் செயல்பட வேண்டி இருக்கும். 

“அனைத்து துறைகளின் தலைவர்களும் அத்திட்டங்களை இலக்காகக் கொண்டு பணியாற்று வர்,” என்று மத்திய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.

“குறிப்பாக ஏழை மக்களை முன்னேற்றும் ‘அந்தோதயா’ திட் டத்தின்கீழ் அனைவரையும் உள்ள டக்கிய சமூகநலப் பணிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப் படும். கிட்டத்தட்ட 220 மில்லியன் மக்கள் பலன்பெறும் வகையிலான திட்டங்கள் பற்றிய அறிவிப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் பதவியில் அமர்த்திய அம்சங்களில் ஒன்று.

“வழக்கமாக புதிய அரசாங் கங்கள் நூறு நாள் திட்டங்களில் கவனம் செலுத்தும். பிரதமர் மோடி அதற்கும் அப்பால் மூன் றாண்டு உத்தியைக் கையாண்டு வருகிறார். அதற்கேற்ற வகையில் புதிய அரசாங்கத்தின் உத்தரவு களுக்காகக் காத்திராமல் ஏற் கெனவே அளிக்கப்பட்ட ஆலோ சனைகளுக்கு இணங்க பணி களை உடனே தொடங்குமாறு எல் லாத் துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

“புதிய அமைச்சர்களும் நேரத் தை வீணடிக்காமல் பிரதமரின் உத்திகளுக்கு செயல்வடிவம் தரு வதில் வேகம் காட்டுவர்,” என்று விளக்கினார் அந்த அதிகாரி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon