கொழும்பு: தற்கொலை தாக்குத லில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்கும் வகையில் இலங்கை ராணுவம் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை யன்று ஐஎஸ் தீவிரவாதிகள் மேற் கொண்ட தற்கொலைப்படை தாக் குதலில் சுமர் 258 பேர் கொல்லப் பட்டனர்.
கடந்த மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட இத்தாக்குதலை அடுத்து, அவசர சட்டத்தைப் பயன்படுத்தி பலர் கைது செய்யப் பட்டனர்.
"கொழும்புவிற்கு வெளியே குறிப்பிட்ட மூன்று பகுதிகளில் தற்போது தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," என் றார் ராணுவ அதிகாரி ஒருவர்.
தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மூண்ட கல வரத்தில் ஒருவர் மாண்டார். மேலும் முஸ்லிம் மக்களின் கடை களும் வீடுகளும் சேதப்படுத்தப் பட்டன. இது தொடர்பாகவும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நாட்டின் பாது காப்பு கருதி அதிபர் மைத்ரிபால சிறிசேன அவசரநிலை பிரக டனத்தைக் கடந்த புதன்கிழமை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்தார்.

