நோயாளியின் வயிற்றிலிருந்து கத்தி, 8 மேசைக்கரண்டிகளை அகற்றிய மருத்துவர்கள்

நோயாளியின் வயிற்றிலிருந்து கத்தி, 8 மேசைக்கரண்டிகளை அகற்றிய மருத்துவர்கள்

1 mins read

மாண்டி: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், நோயாளி ஒருவரின் வயிற்றிலிருந்து மேசைக்கரண்டி கள், ஸ்குரு டிரைவர், கத்தி உள்ளிட்ட பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

சில நாட்களுக்கு முன்னர்

35 வயதான கரண் சென் என்ற மனநலம் குன்றிய ஒருவர், வயிற்று வலி காரணமாக சுந்தர்நகரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது வயிற்றில் ஏதோ முட்டிக்கொண்டு இருப் பதைக் கண்ட மருத்துவர்கள் உட னடியாக 'எக்ஸ்ரே' எடுத்துப் பார்த்தனர்.

அப்போது, அவரது வயிற்றில் சில கத்தி, மேஜைகரண்டிகள், உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

எனவே, இமாச்சலில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றிலிருந்து 8 மேசைகரண்டிகள், 2 ஸ்குரு டிரை வர்கள், 2 பல்துலக்கும் பிரஷ்கள், ஒரு கத்தி ஆகிய பொருட்களை எடுத்தனர்.

நோயாளி இப்போது நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த மருத்து வர்கள், மனநல பாதிப்பு காரண மாக இந்தப் பொருட்களை அவர் விழுங்கியிருக்கலாம் எனக் கூறி னர்.