காஷ்மீரில் 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு

காஷ்மீரில் 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு

1 mins read

ஸ்ரீநகர்: அல்காய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந் ததாகக் கூறப்பட்ட அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற தீவிர வாத இயக்கத்தின் தளபதியான ஜாகிர் மூசா என்பவனைப் பாது காப்புப் படையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

மூசா கொல்லப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பலர் தானாக முன்வந்து கடைகளை அடைத்தனர். சில இடங்களில் போராட்டமும் நீடித்தது.

இதனால், அசம்பாவித சம்பங் கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீநகர், குல்காம், புல்வாமா ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 2வது நாளாக நேற்றும் இந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டது. பள்ளத்தாக்குப் பகுதி களில் இணையத்தள சேவை முடக்கப்பட்டுள்ளது.