சூரத்: பயங்கர தீ விபத்தில் 21 மாணவர்கள் பரிதாப பலி

சூரத்: பயங்கர தீ விபத்தில் 21 மாணவர்கள் பரிதாப பலி

1 mins read
4ce61450-d0a2-43bc-a7a7-5f54762bdc0e
கட்டடத்தின் மாடிகளில் மூண்ட தீயைக் கட்டுப்படுத்த 19 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. படம்: இணையம் -

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் 'தக்ச‌ஷீலா காம்ப்ளக்ஸ்' என்ற கட்டடத்தில் செயல்பட்டு வரும் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 மாணவர்கள் பலி யாகினர்.

அந்தக் கட்டடத்தின் கீழ்த் தளங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

கட்டடத்தின் 4வது மாடியில் நேற்று முன்தினம் பிற்பகல் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பிடித்தது.

3வது, 4வது மாடியில் தீப்பற்றி யதால் புகைமூட்டம் சூழ்ந்தது. தீயிலும் புகையிலும் சிக்கிய மாணவ=மாணவிகள் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார்கள்.

அப்போது உயிர் பிழைப்பதற்காக சிலர் 4வது, 3வது மாடிகளில் இருந்து கீழே குதித்தனர்.

19 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் 21 மாணவர்கள் பலி ஆனார்கள். இவர்களில் சிலர் உடல் கருகியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் இறந்தனர். சிலர் கீழே குதித்ததால் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 16 பேர் படு காயம் அடைந்தனர்.

பயிற்சி மையத்தின் உரிமை யாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.