கட்சியை மறுசீரமைக்க ராகுலுக்கு அதிகாரம்

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்த லில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகல் கடிதம் கொடுத்ததாகவும் செயற்குழு அதனை ஏற்க மறுத்த தாகவும் தகவல் வெளியானது. இந்தத் தகவலை கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மறுத்து விளக்கம் அளித்தார்.

“காங்கிரஸ் கட்சியின் தலை வராக ராகுல் காந்தி நீடிப்பார். கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது,” என அவர் கூறினார்.

முன்னாள் ராணுவ அமைச் சரான ஏ.கே.அந்தோணி கூறும் போது, “எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற முடியவில்லையே தவிர பெரும் சரிவல்ல. முழுமை யாக ஆய்வு செய்த பின்னரே விரிவாக விவாதிப்போம். ராகுல் காந்தி இனி என்ன செய்வார் என்பதை நான் எதுவும் சொல்ல முடியாது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, “காங் கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர் களுக்கு நன்றி. கடுமையாக உழைத்த கட்சித் தலைவர் ராகுலுக் கும் நன்றி.

“தோல்விக்குப் பொறுப்பேற்க ராகுல் காந்தி தயாராக இருந்தார். ஆனால் தோல்விக்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டோம்,” என்று கூறியுள் ளார்.

நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. இது கடந்த 2014ல் கிடைத்த 44 தொகுதிகளைவிட சற்று அதிகம்.

இதற்கிடையே, ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங் களில் இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர் தலே காங்கிரஸ் கட்சிக்கு முக் கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜம்மு காஷ்மீர், டெல்லி சட்டசபைத் தேர்தலும் அடுத்­தடுத்து நடைபெறவுள்ள நிலையில் மூத்த தலைவர்களுக்குப் பதில் புதிய, இளையவர்களை ராகுல் நிய­மிக்கக்கூடும் என்று எதிர்­பார்க்கப்படுகிறது. இதற்கான நட வடிக்கைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மேற்கொள்ளப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!