மோடி வெற்றி; மொட்டையடித்துக் கொண்ட காங்கிரஸ் தொண்டர்

மோடி வெற்றி; மொட்டையடித்துக் கொண்ட காங்கிரஸ் தொண்டர்

1 mins read

ராஜ்கர்: மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை எனப் பாஜக தொண்டரிடம் பந்தயம் கட்டித் தோற்ற மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர் தலையை மொட்டையடித்துக்கொண்டார்.

தேர்தலுக்கு முன்பு ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் பாபு லால் சென்னும் பாஜக தொண்டர் ராம்பாபு மண்ட்லாயும் அவரவர் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ஆகவில்லை எனில் தலையை மொட்டையடித்துக்கொள்வது எனப் பந்தயம் கட்டிக்கொண்டனர். இந்நிலையில் பாஜக பெரும்பான்மையுடன் வென்றதையடுத்துக் காங்கிரஸ் தொண்டர் பாபு லால் சென் தலையை மொட்டையடித்துக் கொண்டார்.